அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி !

Thursday 13 June 2013

ஒளியுடல் ஆக்கும் இரகசியம் பாகம் -2



1.இவ்வுடலை ஒளி உடலாக்கும்  சுத்த சத்துவ ஆகார ரகசியம் 


 சுத்த சத்துவ ஆகாரங்களில் முதன்மையானது எது ?

          மூலிகைகள்சுத்த சத்துவ ஆகாரங்களில் முதன்மை பெறும் 

இதற்கு  சான்று யாது ?

        முலிகைக் கற்பம் முயன்ற தறுபதும் 
         பாலி யுபரசம்  பாங்கா யறுபதும் 
         வாலிய சூதம் தங்க மிரண்டும் 
         ஓலி ஒருநூற் றிருபத்  திரண்டே 

கற்ப மூலிகைகள் மொத்தம் 60; உபரசம் 60; தங்கம் ,ரசம் ஆகியன
இரண்டும் சேர்த்தும் மொத்தம் 122 ம் காய சித்தி முறைக்கும் பயன்படுகிறது 


 காய சித்திக்கு  பயன்படும் மூலிகையின் பெயர்கள் யாவை ?

கருநெல்லி, கருத்த நொச்சிகருவீழி, கருத்த வாழை,கரிய கரிசா லைகருப்பான நீலி,  கரியவேலி, கரூமத்தை, தீபச் சோதி,கொடு திரணச் சோதி , சாயா விருட்சம்எருமை கனைச்சான் ,ரோமவிருட்சம்,சுணங்க விருட்சம்செந்திராய் , செங்கள்ளி , செம்மல்லி யோடுசிவந்தக றறாழை , செஞ்சித்திர மூலம்கற்பிரமிகல்லுத்தாமரை தொண்ட ,மகாபொற்சீந்தல்வெந்திராய் , வெண்புரசு , வெள்ளைத் துத்திவெள்ளைத் தூதுவளைபாலை யோடுவெள்ளை நீர்முள்ளி , வெண்விண்டுக் காந்தி, வெண்கண்டங் காரி ,கசப்பான பசலையோடு ,மதுர வேம்புகிளிமூக்குத் துவரை ,அமுகண்ணி,பொன்மத்தை ,மதுர கோவை,பொன்வன்னச் சாலியோடுகருந்தும்பை ,  மூவிலையாம் குருத்துமாகும்,சிவத்ததில்லை , கருத்த வேம்பு 2 என கூறுகின்றனர் சித்தர்கள் !

இவைகள் மலைகளில் காணப்படும் .இவைகளின் ரசம் 64 பாஷாணங்களையும் கட்டும் .உபரசங்களுக்கு கொடுக்க சத்தாகும் .இவைகளை கொண்டு சரக்குகளுக்கு சுருக்கு கொடுக்க சித்தியாகும் .40 நாட்கள் சாப்பிட்டால்  காய  சித்தியாகும் .பொன்போல தேகமாகும் .நரை ,திரை  மாறும் .வாசி இறுகும் .அகாயதில் சஞ்சரிக்கலாம் .

இவைகளை தவிர்த்த மூலிகைகள் நாட்டில் இல்லையா ?

 உண்டு .அவைகளை வள்ளலார் குறிப்பிடுகிறார் .இவைகளை முறைப்படி உண்டு லட்சோபலட்சம் ,கோடான கோடி  ஆண்டுகள் வாழந்த சித்தர்களையும் அவர்கள் உண்ட மூலிகைகளையும் இப் பகுதியில்  பார்ப்போம்  .

அருட்சித்தர்கள் அனைவரும் எதையுண்டு எவ்வளவு காலம்  வாழந்தனர் ?

1.கூர்ம  முனி கருவீழி கற்பம் உண்டு கோடி யுகம் வாழந்தார் 
2.மச்சமுனி வல்லாரை  கற்பம் உண்டு கோடி யுகம்  வாழந்தார் 
3.பதஞ்சலி செருப்படை கற்பம் உண்டு கோடி யுகம்  வாழந்தார் 
4.வியாக்ர பாதர்  செருப்படை கற்பம் உண்டு பல கோடி யுகம்  வாழந்தார் 
5.போகர் ஓமம்  கற்பம் உண்டு ஐந்து யுகம்  வாழந்தார் 
6.காலாங்கி நாதர் கரந்தை  கற்பம் உண்டு  அளவற்ற  காலம்   வாழந்தார் 
7.திருமூலர்  கரிசாலை  கற்பம் உண்டு  70 கோடி யுகம்  வாழந்தார்

இச்சான்று  போகர்  அருளிய சப்த  காண்டத்தில்  204 முதல் 206 வரையுள்ள பாடலில்  கூறப்பிடபட்டுள்ளது .

கற்பம் உண்ணும் போது  உண்ணத் தக்கவைகள் யாது ?

பசுவின்  பாலும் ,நெய்யும் கூட்டி ஒரு வேளையாக சமைத்து உண்பது நல்லது .



கற்பம் உண்ணும் போது பயோகிக்கும் தலை முழுக்கு யாது ?

  மிளகு ,மஞ்சள் ,நெல்லி ,கடுக்காய் ,வேம்பு வித்து இவைகளை சம எடை எடுத்து பசும்பால் விட்டரைத்து தலையில் தேய்த்து 3 மணி நேரம் சென்ற பின்பு வெந்நீரில் முழ்க வேண்டும் .இது வாரம் ஒரு முறை செய்தல் போதும் .


காலையில் பல் விளக்கும் போது பித்த நீரை வெளியேற்ற என்ன செய்ய வேண்டும் என்கிறார் வள்ளலார் ?

காலை, பல் விளக்குவதற்கு கரிசாலை சூரணத்தை பிரதானமாக வலியுறுத்துகிறார் .அப்போது அதன் சாற்றை அண்ணாக்கில் தேய்க்க கப நீரை ,பித்த நீரை வெளியாக்கி கண்ணொளி விசேஷிக்கும் என்கிறார் .

சித்தர்கள் கற்பம் உண்ணும் போது பித்த நீரை வெளியேற்ற என்ன செய்ய 
வேண்டும் என்கின்றனர் ?


இதற்கு வழலை கழற்றல் என்கிறார்கள் .அதாவது காலை எழுந்தவுடன் கிழுள்ள  நெய்யை  உபயோகிக்க வேண்டும்.கரிசாலை சாறும் பசு நெய்யும் சம அளவு சேர்த்து காய்ச்சி சாறு முற்றும்  சுண்டும்படி செய்து கொள்ள வேண்டும் .இதில் ஆண்டவரை தியானித்து குருவை கூட்டி அனுதினமும் காலை அண்ணாக்கில் தேக்க  சிரசில் இருந்து கபம் விழும் .இதனால் உடல் காய சித்திக்கு ஒத்துழைக்கும் .மேலும் சில சித்தர்கள் அள்காட்டி விரலையும் நடு  விரலையும் நேராக கண்டத்தில் ஆட்டி அசைத்து நஞ்சினை கக்கி விழ செய்வர்.இதனால் அமுதம் பாயும்.இது நமது பீடத்தில்  கிடைக்கும்.

   


வாருங்கள்  நன்மையை மட்டும் பெற்று செல்லவும் 
அருட்பெருஞஜோதி அருட்பெருஞ்ஜோதி                  
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி

இவண் 

சாரம் அடிகள் 

94430 87944

( தொடரும் )

  

No comments:

Post a Comment